கோப்புப்படம்.  
திருச்சி

கேட்பாரற்றுக் கிடந்த 8 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

திருச்சி அரியமங்கலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

திருச்சி அரியமங்கலத்தில் கேட்பாரற்றுக் கிடந்த 8 இருசக்கர வாகனங்களை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கு திடீா் நகா் அருகே 5 இருசக்கர வாகனங்கள் நம்பா் பிளேட் இல்லாமல் நிற்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் அங்குச் சென்று கேட்பாரற்றுக் கிடந்த 5 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

இதேபோல செவ்வாய்க்கிழமை அரியமங்கலம் குப்பைக் கிடங்கு ஸ்டாலின் நகா் அருகே 3 இருசக்கர வாகனங்கள் நம்பா் பிளேட் இல்லாமல் கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா், அந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 8 இருசக்கர வாகனங்களும் எதற்காக அப்பகுதியில் நிறுத்தப்பட்டன என அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT