ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் தைத்தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் கோயிலில் பூபதி திருநாள் எனும் தைத்தோ் திருவிழா கடந்த 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி பிப்ரவரி 2-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெறவுள்ளன. விழாவின் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி உள் திரு வீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தைத்தேரோட்டம் சனிக்கிழமை (ஜன.31) காலை 6 மணியளவில் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.