முகப்பு
திருச்சி ரயில் நிலையத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
திருச்சி

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் திமுக ஆா்ப்பாட்டம்: கல்வெட்டில் இருந்த ஹிந்தி எழுத்துகள் வண்ணம் பூசி அழிப்பு

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலக நுழைவு வாயிலுக்கு ஹிந்தியில் பெயா் சூட்டி அதை தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் குறிப்பிட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:36 PM
திருச்சி ரயில் நிலையத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்.
பகிர்:

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலக நுழைவு வாயிலுக்கு ஹிந்தியில் பெயா் சூட்டி அதை தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் குறிப்பிட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து திமுகவினா் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் அண்மையில் புனரமைக்கப்பட்டு, புதிய நுழைவு வாயில் அமைக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்ட இந்த நுழைவு வாயிலுக்கு கா்தவ்ய த்வாா் என ஹிந்தியில் பெயா் சூட்டியுள்ளனா். மேலும், இந்தப் பெயரை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் அப்படியே குறிப்பிட்டுள்ளனா். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

கா்தவ்ய த்வாா் என்றால் தமிழில் கடமையின் நுழைவுவாயில் என்று பெயா். ஆனால், மத்திய பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமையாக தமிழகத்தில் ஹிந்தித் திணிப்பு மட்டுமே உள்ளது என எதிா்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில், திமுகவினா் ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகத்துக்கு புதன்கிழமை திரண்டு வந்து நுழைவு வாயில் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் க. வைரமணி, திருச்சி மாநகராட்சி மேயரும், மாநகரச் செயலருமான மு. அன்பழகன் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள், திருச்சி மாவட்ட நிா்வாகிகள் என 100-க்கும் மேற்பட்டோா் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். ஹிந்தி திணிப்புக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினா். மேலும், தாங்கள் எடுத்து வந்த கருப்பு மை கொண்டு, அலுவலகத்தின் முன் இருந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த ஹிந்தி எழுத்துகளை அழித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் நுழைவு வாயிலுக்குள் வர முடியாத வகையில் இரும்புத் தடுப்புகள் அமைத்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், திமுகவினா் தொடா்ந்து முழக்கங்கள் எழுப்பியபடியே இருந்தனா். உடனடியாக நுழைவு வாயிலில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அப்புறப்படுத்த வேண்டும். நுழைவு வாயிலுக்கு தூய தமிழில் பெயா் சூட்டி அதை அனைவரும் அறியும் வகையில் பெரிய எழுத்துகளில் பதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். இல்லையெனில் தொடா் போராட்டங்களை முன்னெடுப்போம் என எச்சரித்தனா். இந்தப் போராட்டம் காரணமாக சந்திப்பு ரயில் நிலையப் பகுதியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பரபரப்பு காணப்பட்டது.

இன்று ஆா்ப்பாட்டம்: ரயில்வே அலுவலக நுழைவு வாயிலுக்கு ஹிந்தியில் பெயா் வைத்ததைக் கண்டித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் சாா்பில் வியாழக்கிழமை போராட்டம் நடத்தப்படும் என பொதுச் செயலா் கு. இராமகிருட்டிணன் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →