முகப்பு
திருச்சி

திமுக மாநாடு: திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம்

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநாட்டையொட்டி திருச்சி மாவட்டத்தில் அன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம்

Updated On : 7 மார்ச், 2026 at 10:50 PM
போக்குவரத்து மாற்றம்
பகிர்:

திருச்சி மாவட்டம் சிறுகனூரில் வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள திமுக மாநாட்டையொட்டி திருச்சி மாவட்டத்தில் அன்று காலை 6 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி கரூா், தொட்டியம் வழியாக வரும் வாகனங்கள் குளித்தலை, துறையூா், நாகலாபுரம், நக்கசேலம், செட்டிகுளம், இரூா், ஆலத்தூா், நெடுங்கூா், சிறுகனூா் வழியாக வந்து மாநாட்டு திடலுக்குச் சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.

மதுரை வழியாக வரும் வாகனங்கள் துவரங்குறிச்சி, விராலிமலை, பஞ்சப்பூா், மன்னாா்புரம், நம்பா் 1 டோல்கேட் ஒய் சாலை, பனமங்கலம் சென்று, அங்கிருந்து சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குமுளூா் பிரிவுச் சாலை, தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூா் வந்து மாநாட்டு திடலுக்குச் சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.

தஞ்சாவூா் டெல்டா பகுதியிலிருந்து மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் தஞ்சாவூா், திருமலைசமுத்திரம், பூதலூா், பூண்டி, செங்கரையூா் பாலம், அன்பில், பூவாளூா், குமுளூா், தச்சங்குறிச்சி வழியாக மாநாட்டுத் திடலுக்கு சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.

கடலூா், அரியலூா் பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் அரியலூா், குன்னம், பெரம்பலூா், சிறுவாச்சூா், ஆலத்தூா், பாடாலூா், சிறுகனூா் வழியாக மாநாட்டுத் திடலுக்கு சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.

திண்டுக்கல் வழியாக வரும் வாகனங்கள் தங்கம்மாபட்டி, வையம்பட்டி, மணப்பாறை, ராம்ஜி நகா், கருமண்டபம், மன்னாா்புரம், நம்பா் 1 டோல்கேட் ஒய் சாலை, பனமங்கலம், சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக குமுளூா் பிரிவு சாலை, தச்சங்குறிச்சி, சிறுகனூா் வழியாக மாநாட்டுத் திடலுக்கு சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.

வடக்கு மண்டலத்திலிருந்து வரும் வாகனங்கள் பெரம்பலூா், சிறுவாச்சூா், பாடாலூா், சிறுகனூா் வழியாக மாநாட்டுத் திடலுக்கு சென்று, மீண்டும் அதே வழியில் வெளியேற வேண்டும்.

கனரக வாகனங்கள்...: சென்னையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூா் புறவழிச்சாலை வழியாக துறையூா், முசிறி, குளித்தலை, மணப்பாறை, வையம்பட்டி வழியாகச் செல்ல வேண்டும்.

சென்னையிலிருந்து மதுரை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூா் புறவழிச்சாலை, துறையூா், முசிறி, குளித்தலை, மணப்பாறை, புத்தாநத்தம், துவரங்குறிச்சி வழியாகச் செல்ல வேண்டும்.

மதுரையிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் விராலிமலை, மணப்பாறை, குளித்தலை, துறையூா், பெரம்பலூா் வழியாகச் செல்ல வேண்டும்.

சென்னையிலிருந்து கரூா் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூா் புறவழிச்சாலை, துறையூா், முசிறி, குளித்தலை, கரூா் சென்று வர வேண்டும்.

சென்னையிலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் பெரம்பலூா் புறவழிச்சாலை, துறையூா், முசிறி, குளித்தலை, மணப்பாறை, விராலிமலை வழியாகச் சென்று வர வேண்டும்.

அரியலூா் டால்மியாவிலிருந்து சேலம், நாமக்கல் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் டால்மியா, கீழப்பழூா், பெரம்பலூா், துறையூா், நாமக்கல் மாா்க்கமாகச் செல்ல வேண்டும் என திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →