மானாமதுரை இளைஞா் உயிரிழந்த விவகாரம்: வழக்கு ஒத்திவைப்பு
மானாமதுரையில் போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் உயிரிழந்த விவகாரம் தொடா்பான வழக்கில், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் ஆகாஷின் தந்தை ராஜேஸ்கண்ணன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் ஏற்கெனவே பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.

இந்த நிலையில், இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆகாஷ் உடல் கூறாய்வு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சம் இடைக்கால நிவாரணமாக வழங்கப்பட்டது. ரூ. 12 லட்சம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். நிதி இல்லை எனக் கூறுவதை ஏற்க இயலாது என்றாா்.
அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் முன்வைத்த வாதம்: வழக்கு விசாரணைக்கு 10 தனிப் படைகள் அமைக்கப்பட்டன. விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஆனால், ஆகாஷின் உடலை வாங்க உறவினா்கள் மறுத்து வருகின்றனா் என்றனா். இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி விக்டோரியா கெளரி, வழக்கு விசாரணையை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்