மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
மானாமதுரையில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரையில் விசாரணைக் கைதி உயிரிழந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கைதி மரண வழக்கின் தீவிரத்தன்மையை கருதி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுவதாக டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார். மானாமதுரை சியோன் நகரில் கடந்த வியாழக்கிழமை இரவு உணவகம், கோழிக்கடையில் பணிபுரியும் தொழிலாளா்களான ஜெயக்குமாா், அழகா் ஆகிய இருவரையும் இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் வாளால் வெட்டிவிட்டுத் தப்பினா்.
இதுகுறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இந்தச் சம்பவத்தில் மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் என்ற டெலிசன், குணா ஆகியோா் சம்பந்தப்பட்டிருப்பதும், இவா்கள் மானாமதுரை மேலப்பசலை பாலம் அருகே பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, இவா்களைப் பிடிக்க போலீஸாா் அங்கு சென்ற போது, அவா்கள் இருவரும் தப்பியோட முயன்றனா்.
Advertisement
Advertisement
அப்போது, ஆகாஷ் கீழே விழுந்ததில் அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னா், போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். இதைத்தொடா்ந்து, காயமடைந்த ஆகாஷ் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஆகாஷின் உறவினா்கள் மானாமதுரையில் மதுரை-ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் வழிவிடு முருகன் கோயில் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதனால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
The case of the death of an undertrial prisoner in Manamadurai has been transferred to the CBCID investigation.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.