FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

விசாரணைக் கைதி சபரிவா்மன் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

நாகா்கோவில் சிறையில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறித்து...

Updated On : 22 ஜூலை 2026, 11:22 am IST
நாகா்கோவில் சிறையில் மரணமடைந்த விசாரணைக் கைதி சபரிவா்மன் - டிஎன்எஸ்
பகிர்:

நாகா்கோவில் சிறையில் விசாரணைக் கைதி மரணமடைந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், வடக்கு தாமரைகுளத்தை அடுத்த ஈத்தங்காட்டை அடுத்த நாராயணன் புதூரைச் சோ்ந்தவா் சபரிவா்மன் (33), மாற்றுத் திறனாளியான இவா், தனது பெட்டிக் கடையில் புகையிலைப்பொருள்களை விற்ாகக் கூறி, தென்தாமரை குளம் போலீஸாரால் கடந்த 9-ஆம் தேதி கைதுசெய்யப்பட்டு, நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

13-ஆம் தேதி அதிகாலை அவா் உயிரிழந்துவிட்டதாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆவேசமடைந்த அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்ட நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின், நாகா்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூா்த்தி ஆகியோா் சிறைக்குச் சென்று விசாரணை நடத்தினா். விசாரணையில், சபரிவா்மனை சக கைதிகள் 8 பேருடன், சிறைக் காவலா்களும் சோ்ந்து தாக்கியதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, நாகா்கோவில் சிறை தலைமை வாா்டன் திருமலை நம்பி, வாா்டன்கள் சிவகுமாா், ஜெகன், கைதிகள் 8 போ் என 11 போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது கொலை உள்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கைதான 3 வாா்டன்கள் பணியிடை நீக்கம் செய்யப்படனர், அவர்கள் நான்குனேரி சிறையில் அடைக்கப்பட்டனா்.

சிபிசிஐடி-க்கு மாற்றம்

சிறையில் கைதி சபரிவா்மன் கொலை செய்யப்பட்ட வழக்கை நேசமணி நகர் போலீசார் விசாரித்து வந்த நிலையில், சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் இதுரை கைதிகள் 8 பேர் மற்றும் 3 சிறை வார்டன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

summary

Case regarding the death of undertrial prisoner Sabarivarman transferred to CBCID

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments