விசாரணைக் கைதி மரணத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்? திமுக
நாகர்கோயிலில் விசாரணைக் கைதி சபரிவர்மன் மரணம் விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு திமுகவின் கேள்வி குறித்து...
நாகர்கோயிலில் விசாரணைக் கைதி சபரிவர்மன் மரணம் தொடர்பான விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பதாக முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நாராயணன்புதூர், ஈத்தங்காட்டை சேர்ந்த சபரிவர்மன் (34 ) மீது குட்கா வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஜூலை 8-ல் நாகர்கோவில் கிளைச் சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட சபரிவர்மனுக்கு தென் தாமரைகுளம் காவல் நிலையத்தில் நடந்தது என்ன?
நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட சபரிவர்மனுக்கு மரணம் ஏற்பட என்ன காரணம்? மரணத்தை மறைத்து அனாதை பிணம் எனச் சொல்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிரேத வைப்பறையில் வைத்த மர்மம் என்ன?
Advertisement
Advertisement
திருப்புவனம், மடப்புரம் அஜித் குமாரின் காவல்நிலைய மரணத்தின்போது மு.க. ஸ்டாலினிடம் உங்களுக்கு ஆட்சி எதற்கு? உங்களுக்கு முதல்வர் பதவி எதற்கு ? என்று நீங்கள் ஓலமிட்டது உங்களுக்கு நினைவிருக்கிறதா? எதற்கும் பதில் சொல்லாமல் கள்ள மெளனம் காட்டுவது ஏன்?
அஜித் குமார் மரணத்தை சிபிஐ விசாரணைக்கு முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு, குடும்பத்துக்கு ரூ. 32.5 லட்சம் நிவாரணம் வழங்கி, அவரது சகோதரருக்கு அரசு வேலையும் வழங்கியதுபோல் உடனடியாக சபரிவர்மன் மரணத்திற்கும் உத்தரவிடுவீர்களா?" என்று கூறியுள்ளார்.
இதனிடையே, சிறையில் உயிரிழந்த சபரிவர்மன் மரணத்துக்கு உரிய இழப்பீடும், அவரது குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்றும்கோரி, அவரது உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக சபரிவர்மனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Why does CM Vijay remain silent on the death of the undertrial prisoner Sabarivarman?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.