விசாரணைக் கைதி மரணம்: இழப்பீடு, அரசுப் பணி கோரி குடும்பத்தினர் போராட்டம்
நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கக் கோரிக்கை குறித்து...
நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த மாற்றுத் திறனாளி சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் குட்கா வழக்கில் கைது செய்து சிறையிலடைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சபரிவர்மன் நீதிமன்றக் காவலில் சிறையிலிருக்கும்போதே உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாகவும் அவரை மாற்றுத் திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும், அவரது உடலை வாங்க மறுத்த குடும்பத்தினர் 3-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், சிறையில் உயிரிழந்த சபரிவர்மன் மரணத்துக்கு உரிய இழப்பீடும், அவரது குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும் என்றும் சபரிவர்மனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் காவலர்கள் 3 பேரும், சிறைக் கைதிகள் 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Death of undertrial prisoner Sabarivarman case: Family protests demanding compensation and a government job
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.