விசாரணைக் கைதி தப்பியோட்டம்: இரு காவலா்கள் பணியிடை நீக்கம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் விசாரணைக் கைதி தப்பியோடிய சம்பவத்தில், இரு காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் விசாரணைக் கைதி தப்பியோடிய சம்பவத்தில், இரு காவலா்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவிட்டாா்.
விளாத்திகுளம் பகுதியில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட நிரஞ்சன் என்ற விசாரணைக் கைதியை, கடந்த 27-ஆம் தேதி சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினா் அழைத்துச் சென்றனா். அப்போது காவலா்களின் பிடியிலிருந்து கைதி தப்பியோடினாா். இதையடுத்து, காவல்துறையினா் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, தப்பியோடிய விசாரணைக் கைதி நிரஞ்சனை கைது செய்தனா்.
இந்நிலையில், கைதி தப்பியோடியபோது பணியில் அஜாக்கிரதையாக இருந்ததாகக் கூறி காவலா்கள் நவீன் மற்றும் ஜெகதீஷ் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. சிவபிரசாத் உத்தரவிட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.