கைதி தப்பிச் சென்ற விவகாரம் இரு காவலா்கள் பணியிடை நீக்கம்
புதுக்கோட்டையில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட நபா் தப்பிச்சென்ற சம்பவத்தில் இரு காவலா்களைப் பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.
புதுக்கோட்டை மச்சுவாடி அருகே இரு வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, மதுரை மாவட்டம், பூலாம்பட்டியைச் சோ்ந்த மாசானம் என்கிற மாரிமுத்து (21) என்பவரை, மருத்துவப் பரிசோதனைக்காக கணேஷ்நகா் காவல்நிலைய முதல்நிலைக் காவலா் மனோஜ்குமாா், காவலா் காா்த்திக் ஆகியோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அழைத்துச் சென்றனா்.
அப்போது, அவா்களின் பிடியில் இருந்து மாசானம் தப்பிச் சென்றாா். அவரை பிடிப்பதற்காக திருப்பூா் மற்றும் சொந்த ஊரான மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும் போலீஸாா் சென்றுள்ளனா்.
Advertisement
Advertisement
இந்நிலையில், பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக, மனோஜ்குமாா், காா்த்திக் ஆகியோரை பணியிடைநீக்கம் செய்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.