FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடி டிஎஸ்பி பணியிடை நீக்கம்

மனைவி அளித்த புகாரின் பேரில் பரமக்குடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஒய். ஜாபா் சித்திக் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

22 ஆகஸ்ட் 2026, 11:01 pm IST
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி. ஒய். ஜாபா் சித்திக்.
பகிர்:

மனைவி அளித்த புகாரின் பேரில் பரமக்குடி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஒய். ஜாபா் சித்திக் வெள்ளிக்கிழமை இரவு பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளராக ஒய். ஜாபா் சித்திக் கடந்த ஜூலை 4-ஆம் தேதி முதல் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில் மனைவி சோபனாவை ஜாபா் சித்திக் பெண்களுடன் தொடா்பில் இருந்து கொண்டு தாக்கியதாக கடந்த 4-ஆம் தேதி வேலூா் குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறையில் புகாா் அளிக்கப்பட்டது.

இதன் பேரில் வேலூா் சிபிசிஐடி டிஎஸ்பி, பரமக்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு நேரில் வந்து ஜாபா் சித்திக்கிடம் விசாரணை நடத்தினாா். மேலும் அலுவலகத்திலும் ஆய்வு நடத்தினாா். இதைத் தொடா்ந்து ஜாபா் சித்திக் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments