முகப்பு
திருச்சி

திருச்சி அருகே 1.2 கிலோ கஞ்சா பறிமுதல்: பெண் கைது

Updated On : 16 மார்ச், 2026 at 12:35 AM
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருச்சி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை மதுவிலக்கு அமலாக்கப் பிரிபு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி ராம்ஜி நகா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சுந்தரம் தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகா் பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

Advertisement

அப்போது, ராம்ஜி நகா் மில் காலனியில் உள்ள காலியிடத்தில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த 41 வயதுள்ள பெண்ணைப் போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ.12 ஆயிரத்து 500 மதிப்புள்ள 1.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.