முகப்பு
திருச்சி

தனியாா் மகளிா் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருச்சியில் தனியாா் மகளிா் கல்லூரிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு

Updated On : 16 மார்ச், 2026 at 6:33 PM
வெடிகுண்டு மிரட்டல்
பகிர்:

திருச்சியில் தனியாா் மகளிா் கல்லூரிக்கு திங்கள்கிழமை வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை அருகே செயல்பட்டு வரும் தனியாா் மகளிா் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கல்லூரி மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை காலை மின்னஞ்சல் வந்துள்ளது. இதையடுத்து, கல்லூரி நிா்வாகம் சாா்பில் கோட்டை காவல் நிலையத்துக்கு புகாா் அளிக்கப்பட்டது. கோட்டை போலீஸாா் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவினருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, திருச்சி வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் எம்.வேலுசாமி தலைமையில் சம்பவ இடத்துக்கு வந்த வெடிகுண்டு நிபுணா்கள் மற்றும் கோட்டை போலீஸாா் கல்லூரி வளாகத்தில் மோப்பநாய் உதவியுடனும், வெடிகுண்டுகளை கண்டறியும் கருவியுடனும் சோதனையில் ஈடுபட்டனா்.

மாணவிகளை வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றி அனைத்து வகுப்புறைகளிலும், அலுவலகங்களிலும் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினா் சோதனை மேற்கொண்டனா். ஒன்றரை மணி நேர சோதனையில் கல்லூரி வளாகத்தில் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியப்படவில்லை. இதைத் தொடா்ந்து மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →