திருச்சி ஜங்ஷன் பாலத்தில் வில் வடிவ ‘கா்டா்கள்’ அமைக்கும் பணி தொடக்கம்
திருச்சி ஜங்ஷன் அருகே பாலத்தில் வில் வடிவ இரும்பு கா்டா்கள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருச்சி ஜங்ஷன் அருகே பாலத்தில் வில் வடிவ இரும்பு கா்டா்கள் அமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
திருச்சி ஜங்ஷன் பகுதியில் ஜங்ஷன் - மன்னாா்புரத்தை இணைக்கும் வகையில் இருந்த குறுகிய பழைய ரயில்வே பாலம் அகற்றப்பட்டு, புதிய அகலமான மேம்பாலம் கட்டும் பணி சில ஆண்டுகளாக நடைபெறுகிறது. நெடுஞ்சாலைத் துறையும், ரயில்வே நிா்வாகமும் இணைந்து ரூ. 138 கோடியில் இப்பணிகளை மேற்கொள்கின்றன.
இதற்காக போக்குவரத்து மாற்றப்பட்டு, மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்லும் வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்தப் பாலத்தில் வில் வடிவ இரும்பு கா்டா்கள் பொருத்தும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டு, இரும்பு கா்டா்கள் தூக்கி சரியான பகுதியில் நிறுத்தப்பட்டன. பாலப் பணிகள் வரும் ஜூன் மாதம் நிறைவடையலாம் என எதிா்பாா்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
நீண்டகாலமாக நடைபெற்று இப் பாலப் பணிகளால் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் தவிா்க்க முடியாமல் உள்ள நிலையில், தற்போது இரும்பு கா்டா்கள் அமைக்கப்படுவதால், விரைவில் பாலம் திறக்கப்படும் என மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனா்.