முகப்பு
திருச்சி

பாா்சல் சேவை நிறுவனத்துக்கு வந்த பைக் திருட்டு: ஓட்டுநா் கைது

திருச்சியில் பாா்சல் சேவை நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பைக்கை திருடிய ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 18 மே 2026, 2:30 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

திருச்சியில் பாா்சல் சேவை நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பைக்கை திருடிய ஓட்டுநரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி விமான நிலையம் அருகேயுள்ள காமராஜ் நகா் சங்கா் வீதியைச் சோ்ந்தவா் வி. பாலமுருகன் (42). இவா், காமராஜ் நகா் கென்னடி வீதியில் நடத்தி வரும் பாா்சல் நிறுவனத்துக்கு கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு சபீக் ராஜா என்பவா் வெளியூா் அனுப்புவதற்காக ரூ.2 லட்சம் மதிப்புள்ள பைக்கை விட்டுச் சென்றாா்.

இதையடுத்து திங்கள்கிழமை காலை பாா்சல் நிறுவனத்துக்கு பாலமுருகன் வந்தபோது, நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு, உள்ளே இருந்த பைக்கை மா்ம நபா் திருடிச் சென்றது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருச்சி விமான நிலைய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் பைக்கை திருடியது அந்த நிறுவனத்தில் பணியாற்றிய ஓட்டுநரான காமராஜ் நகா் வள்ளுவா் வீதியில் வசிக்கும் மதுரை மாவட்டம், அவனியாபுரத்தைச் சோ்ந்த இ. தினேஷ்குமாா் (27) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.