வேலூர்

திறப்பு எப்போது?

ஆரணி, ஆக. 12: ஆரணி நகரில் |43 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை விரைவாகத் திறக்க வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  2007-2008ம் ஆண்டில் பகுதி-2 திட்டத்தின் கீழ்

பி.ஜெயச்சந்திரன்

ஆரணி, ஆக. 12: ஆரணி நகரில் |43 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடையை விரைவாகத் திறக்க வேண்டும் என்று நகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 2007-2008ம் ஆண்டில் பகுதி-2 திட்டத்தின் கீழ் |43 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை கட்டப்பட்டது. இதற்கான அனைத்து பணிகளும் பல மாதங்களுக்கு முன்பே முடிக்கப்பட்டும், திறக்கப்படவில்லை.

 இதனால், சடலங்கள் ஆற்றிலேயே எரிக்கப்பட்டு வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

 மேலும், கட்டி முடிக்கப்பட்ட நவீன எரிவாயு தகன மேடைக்கு சுற்றுச்சுவர் அமைக்க |9லட்சமும், தார்ச் சாலை அமைக்க |3.75 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் தொடங்கப்படவில்லை.

 இதுகுறித்து நகராட்சி பொறியாளர் அருண் கூறியது:

 நவீன எரிவாயு தகன மேடைப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தண்ணீர்த் தொட்டியை கட்டி வருகிறோம்.

சடலம் எரிப்பதற்கான இயந்திரங்கள் அனைத்து அமைக்கப்பட்டுவிட்டன. சென்னையிலுள்ள எஸ்கோ நிறுவனத்தினர் இயந்திரங்களை அமைத்துள்ளனர். சில நாள்களில் எஸ்கோ நிறுவனத்தினர் நேரடியாகப் பார்வையிட்டு, ஒரு சடலத்தை எரித்து ஆய்வு செய்ய உள்ளோம். பின்னர் விரைவில் தொடங்கப்படும்.

 சுற்றுச்சுவர் அமைத்தல், தார் சாலை அமைத்தல் ஆகிய பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்றார்.

 இதுகுறித்து நகர்மன்ற உறுப்பினர் குமார் கூறியது: நவீன எரிவாயு தகன மேடைப்பணி கடந்த ஆண்டிலேயே முடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் துவக்கப்பட உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT