திருவண்ணாமலை, ஜன. 19: திருவண்ணாமலை மாவட்ட சுகாதார சங்கத்தில் (காசநோய்) ஆய்வக நிபுணர் பணிக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் மு.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிóட்ட செய்திக் குறிப்பு:
திருத்தி அமைக்கப்பட்ட காசநோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மாவட்ட சுகாதார சங்கத்தில் தொகுப்பூதிய முறையில் பணிபுரிய லேப் டெக்னிஷியன்கள் தேவைப்படுகின்றனர்.
12-ம் வகுப்பில் அறிவியல் பாடத்துடன் டி.எம்.எல்.டி அல்லது சி.எம்.எல்.டி. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை மருத்துவக் கல்லூரி இயக்ககத்தில் பதிவு செய்யப்பட்ட பயிற்சி நிலையங்களில் இருந்து சான்று பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம். இப்பணி முற்றிலும் தாற்காலிகமானது. பிற்காலத்தில் இதன் மூலம் அரசு பணியில் முன்னுரிமை கோர இயலாது.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களுடன் சுய விலாசமிட்ட ரூ.5 அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட உறையின் மேல் ஆய்வக நிபுணர் பணியிடத்துக்கு விண்ணப்பம் எனகுறிப்பிட்டு வரும் 30-ம் தேதிக்குள் துணை இயக்குநர், (காசநோய்), சுகாதாரப் பணிகள், மாவட்ட சுகாதார சங்கம் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், அரசு மருத்துவமனை வளாகம், திருவண்ணாமலை-606 601 முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.