ரேஷன் பொருள்களுக்கு கூடுதல் விலை: அதிருப்தியில் வேலூர் மாவட்ட போலீஸôர்
அரக்கோணம், மே 5:தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸôர் கூறுகின்றனர். தமிழகத்தில் பணிபுரியும் சீருடைப் பணியாளர்களான போலீஸôருக்கு தமிழக
அரக்கோணம், மே 5:தமிழக அரசால் வழங்கப்படும் ரேஷன் பொருள்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளதாக வேலூர் மாவட்ட போலீஸôர் கூறுகின்றனர்.
தமிழகத்தில் பணிபுரியும் சீருடைப் பணியாளர்களான போலீஸôருக்கு தமிழக அரசு மானிய விலையில் அரிசி, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட அத்தியவாசியப் பொருள்களை வழங்கி வருகிறது.
இதற்கான விலை சென்னையில் உணவுத் துறை அமைச்சகத்தின் மூலம் இறுதி செய்யப்பட்டு, விலை புள்ளிகள் மாநில நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அவர்கள் மூலம் நியாயவிலைக் கடைகளில் போலீஸôருக்கு இப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது.
தற்போது விநியோகிக்கப்படும் பொருள்களின் விலை மாவட்டத்துக்கு மாவட்டம்
வேறுபடுவதாக கூறப்படுகிறது.
திருவள்ளுர் மாவட்ட போலீஸôர் ஒரு கிலோ துவரம் பருப்பை ரூ.20-க்கு வாங்குகின்றனர். ஆனால், அண்டை மாவட்டமான வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக ஒரு கிலோ துவரம் பருப்பை ரூ.30-க்கு வாங்கி வருவதாகப் போலீஸôர் கூறுகின்றனர்.
மாநிலம் முழுவதும் ஒரே விலைப் புள்ளியை பெற்ற தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினர் வேலூர் மாவட்டத்தில் மட்டும் துவரம் பருப்பை ரூ.10 கூடுதலாக விற்பது ஏன் என்பது புரியாத புதிராக உள்ளது என்று பாதிக்கப்பட்ட போலீஸôர் கூறுகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் சுமார் 3 ஆயிரம் போலீஸôர் கூடுதல் விலை கொடுத்து துவரம் பருப்பை வாங்கி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட போலீஸôரின் அதிருப்தியை போக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?