முகப்பு
வேலூர்

பரிதவிக்கும் கிராமப்புற மாணவர்கள்: பஸ் பாஸ் இருந்தும் பயனில்லை!

செய்யாறு, நவ. 9: செய்யாறு பகுதியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டிருந்தாலும், 8-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களால் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.  காரணம், அந

வேலூர்

பரிதவிக்கும் கிராமப்புற மாணவர்கள்: பஸ் பாஸ் இருந்தும் பயனில்லை!

செய்யாறு, நவ. 9: செய்யாறு பகுதியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டிருந்தாலும், 8-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களால் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.  காரணம், அந

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:09 PM
பகிர்:

செய்யாறு, நவ. 9: செய்யாறு பகுதியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டிருந்தாலும், 8-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களால் அதைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

 காரணம், அந்த பாதையில் அரசு நகரப் பேருந்து ஒன்று கூட இயக்கப்படாததுதான் என்று புகார் கூறுகின்றனர் மாணவர்கள்.

 செய்யாறிலிருந்து ஆர்க்காடு செல்லும் பாதையில் சிறுங்கட்டூர், பூதேரி புல்லவாக்கம், ஏரிக்கரை, தளரபாடி, மோரணம், ராந்தம், முள்ளுவாடி, கலவை கூட்டுரோடு ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் இருந்து சென்று, செய்யாறில் உள்ள கலைக் கல்லூரி, ஆண்கள், பெண்கள் மேனிலைப் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

 இவர்கள் அனைவரும், அரசு போக்குவரத்துக் கழகத்தின் செய்யாறு பணிமனை சார்பில் வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸ் வைத்திருந்தாலும், அதை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். காரணம், இந்த வழித்தடத்தில் ஒரு அரசு நகரப் பேருந்து கூட இயக்கப்படாததுதான்.

 கிராமப் புற மாணவர்கள் நீண்ட தொலைவில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று வர அரசு இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. தொடக்கத்தில் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் என்றிருந்த இலவச பஸ் பாஸ், பின்னர் கல்லூரி மாணவ, மாணவியர், பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

 ஆனால், மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பஸ் பாûஸ பயன்படுத்த ஏதுவாக, போக்குவரத்து வசதிகளைச் செய்துதர, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் முன்வரவில்லை என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  மேலும், தொலைவு அதிகம் என்பதால், அரசு வழங்கும் இலவச சைக்கிளையும் மாணவ, மாணவியர் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

 இதனால் காலை, மாலை வேளைகளில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் தனியார் பஸ்களிலும், வேலூர்-புதுச்சேரி செல்லும் தடம் எண்.209 ஆகியவற்றிலும் கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 எனவே, மாணவ, மாணவியர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தினர் நலன் கருதி, பள்ளி செல்லும் நேரத்தில், செய்யாறு, மோரணம், ராந்தம், கலவை அல்லது ஆர்க்காடு வரையில் அரசு நகர பஸ்களை இயக்க போக்குவரத்துக் கழகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →