முகப்பு
வேலூர்

அவலநிலையில் வந்தவாசி பஸ் நிலையம்

வந்தவாசி, நவ.10: வந்தவாசி பஸ் நிலையத்தில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.   பஸ் நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:09 PM
பகிர்:

வந்தவாசி, நவ.10: வந்தவாசி பஸ் நிலையத்தில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

  பஸ் நிலையம் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த பஸ் நிலையத்தில் 10 பஸ் நிறுத்தும் இடங்களும், 20-க்கும் மேற்பட்ட கடைகளும் உள்ளன.

  வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திற்கு வந்துதான் பஸ் ஏற வேண்டும். வந்தவாசியை சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும் இந்த பஸ் நிலையத்திற்கு வந்து பிற ஊர்களுக்கு செல்கின்றனர்.

  சென்னை, காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், கடலூர், ஆரணி, வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி, திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் செல்லும் பஸ்கள் இந்த பஸ் நிலையத்திற்குள் வந்துதான் செல்ல வேண்டும்.

  இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் தொட்டி ஒன்று இந்த பஸ் நிலையத்தினுள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பராமரிப்பின்றியும், பயன்பாடின்றியும்

உள்ளது.

  பஸ் நிலையத்தினுள் உள்ள இலவச சிறுநீர் கழிப்பிடம் ஒன்று மூடப்பட்டுள்ளது.

மற்றொன்று சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

  பஸ் நிலையத்தினுள் துர்நாற்றம் வீசுவதால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். இந்த பஸ் நிலையத்தை பராமரிக்கும் நகராட்சி உடனடியாக சீர்கேடுகளை களைய வேண்டும் என்பதே வந்தவாசி நகர மக்களின் கோரிக்கையாக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →