முகப்பு
வேலூர்

படிகட்டிலும், கூரையிலும் ஆபத்தான பயணம் 400 மாணவர்களுக்கு ஒரே பஸ்

செய்யாறு,நவ. 21: செய்யாறு-ஆரணி வழித்தடத்தில் 400 மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே ஒரு நகரப் பேருந்து இயக்கப்பட்டுள்ளதால், பயணிக்க முடியாமல் அவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:17 PM
பகிர்:

செய்யாறு,நவ. 21: செய்யாறு-ஆரணி வழித்தடத்தில் 400 மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே ஒரு நகரப் பேருந்து இயக்கப்பட்டுள்ளதால், பயணிக்க முடியாமல் அவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 செய்யாறில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் படிக்க அருகாவூர்,  தண்டரை, பெரும்பள்ளம், வடுகப்பட்டு,சுண்டிவாக்கம், இருங்கூர், சிவபுரம், மாம்பாக்கம், வாழப்பந்தல், கொருக்கை, கலவை, எஸ்.வி.நகரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

 இப்பகுதிகளில் உள்ள 400 மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்கள் செய்யாறு, ஆரணி அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனைகளில் வழங்கப்பட்டுள்ளன. ஆனால்,  செய்யாறு-ஆரணி வழித்தடத்தில் செய்யாறு பணிமனையில் இருந்து ஒரே நகரப் பேருந்துதான் இயக்கப்படுகிறது.  ஆரணி பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்த நகரப் பேருந்தும் அண்மையில் நிறுத்தப்பட்டுவிட்டது.

 இதனால், ஆரணியில் காலை 7.35 மணிக்கு புறப்படும் இந்தப் பேருந்தில், 400 மாணவர்கள் ஒரே நேரத்தில் பயணிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் ஓடும் பேருந்தில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டும், கூரையில் அமர்ந்தும் பயணிக்கின்றனர். ஆபத்தான பயணத்தை விரும்பாத மாணவர்கள் பஸ் பாஸ் இருந்தும் அதை உபயோகப்படுத்தாமல், தனியார் பஸ்களில் பயணித்து வருகின்றனர்.

 ஆகவே, ஆரணி-செய்யாறு வழித்தடத்தில் கூடுதலாக நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும், நிறுத்தப்பட்ட பஸ்ûஸ இயக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பு.

முழு கட்டுரையைப் படிக்க →