முகப்பு
வேலூர்

போக்குவரத்துக்கு தகுதியற்ற அரக்கோணம்-சென்னை சாலை

அரக்கோணம், நவ.23: அரக்கோணம்-சென்னை சாலை, தார் முற்றிலும் பெயர்ந்து மண்சாலையாக மாறி போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளது.   அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் வழியாக சென்னை செல்ல இச்சாலையைத்தான் பொது மக்க

Updated On : 27 டிசம்பர், 2023 at 6:18 PM
பகிர்:

அரக்கோணம், நவ.23: அரக்கோணம்-சென்னை சாலை, தார் முற்றிலும் பெயர்ந்து மண்சாலையாக மாறி போக்குவரத்துக்கு தகுதியற்றதாக உள்ளது.

  அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர் வழியாக சென்னை செல்ல இச்சாலையைத்தான் பொது மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு எடுத்து செல்லும் வாகனங்களும், அரக்கோணத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்களும் இச்சாலையைத்தான் பயன்படுத்தி வருகின்றன.

  அரக்கோணத்திலிருந்து திருவாலங்காடு வரை 14 கி.மீ. தூரத்துக்கு தார் முற்றிலும் பெயர்ந்து மண்சாலை போல காட்சியளிக்கிறது. மேலும் குண்டும் குழியுமாக வாகனங்கள் செல்ல தகுதியாற்றதாக உள்ளது. வேலூர் மாவட்ட எல்லைவரை நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வரும் இச்சாலை திருவள்ளுர் மாவட்ட பகுதியில் இவ்வாறு உள்ளது.

  இச்சாலையை சீரமைக்க கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சாலையோரங்களில் கற்கள் கொட்டப்பட்டதாம். ஆனால் மூன்று மாதங்கள் கழித்து கொட்டியவர்களே அவற்றை அள்ளி எடுத்துச்சென்று விட்டனராம்.

  இதனால் வாகனங்கள் திருத்தணி வழியாக, கூடுதலாக 25 கி.மீ சுற்றிச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் துரிதமாக செல்ல முடியாமல் உயிரிழப்புகள் நிகழும் அபாயமும் உள்ளது.

 எனவே வேலூர் மற்றும் திருவள்ளுர் மாவட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இச்சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.