முகப்பு
வேலூர்

செய்யாறு வழியாக தொலைதூர பஸ்கள் இயக்கப்படுமா?

செய்யாறு,அக்.19: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நகர மக்களிடையே வலுத்து வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டத

வேலூர்

செய்யாறு வழியாக தொலைதூர பஸ்கள் இயக்கப்படுமா?

செய்யாறு,அக்.19: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நகர மக்களிடையே வலுத்து வருகிறது.  திருவண்ணாமலை மாவட்டத

Updated On : 28 டிசம்பர், 2023 at 1:55 PM
பகிர்:

செய்யாறு,அக்.19: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வழியாக தென்மாவட்டங்களுக்குச் செல்லும் தொலைதூர பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை நகர மக்களிடையே வலுத்து வருகிறது.

 திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது வருவாய் கோட்டமாகவும், அரசு அலுவலகங்களின் தலைமையிடமாகவும், திருவண்ணாமலை போக்குவரத்து மண்டலத்தில் செய்யாறு தொகுதி அமைந்துள்ளது.

 செய்யாறு வட்டத்தில் 222 கிராமங்களில் சுமார் 3 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

 திருவத்திபுரம் நகராட்சி, செய்யாறு, வெம்பாக்கம், அனுக்காவூர் ஆகிய ஊராட்சி ஓன்றியங்கள் ஆகியன இவ்வட்டத்தில் உள்ளன.

 அரசு அலுவலகங்கள், அரசு கலைக் கல்லூரி, தனியார் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரியும் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்கள் என செய்யாறு வளர்ந்து வருகிறது.

 இந்நிலையில், போக்குவரத்து வசதியில் மட்டும் செய்யாறு இன்னும் முழுமையான வளர்ச்சியை எட்டவில்லை. குறிப்பாக தென்மாவட்டங்களுக்கு செய்யாறு மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எளிதில் சென்று வருவதற்கு ஏதுவாக தொலைதூர பஸ்கள் இப்பகுதி வழியாக இயக்கப்படாதது குறையாக உள்ளது.

 இது தொடர்பாக அனைத்து வியாபாரிகள் சங்கம், சமூக ஆர்வலர்கள் பலரும் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோரிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

 செய்யாறில் இருந்து திருச்சி செல்லும் தடம் எண்.555 பஸ் மட்டுமே தொலைதூர பஸ்ஸôக அமைந்துள்ளது.

 அதேபோல் மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு, செய்யாறு தொகுதியில் அடங்கிய வெம்பாக்கம் மற்றும் பிரம்மதேசம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் செய்யாறு வழியாக சென்று வர ஏதுவாக பஸ்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நீண்டநாளாக கிடப்பில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →