அதிக லாபம் தரும் விதைநெல் உற்பத்தி
செய்யாறு: விவசாயிகள் நெல்லை தானியமாக விற்பதை விட விதை நெல்லாக விற்றால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என செய்யாறு கோட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்பொழுது நெல் அ
வேலூர்அதிக லாபம் தரும் விதைநெல் உற்பத்தி
செய்யாறு: விவசாயிகள் நெல்லை தானியமாக விற்பதை விட விதை நெல்லாக விற்றால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என செய்யாறு கோட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்பொழுது நெல் அ
செய்யாறு: விவசாயிகள் நெல்லை தானியமாக விற்பதை விட விதை நெல்லாக விற்றால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என செய்யாறு கோட்ட வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தற்பொழுது நெல் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு பருவத்திலும் அறுவடை செய்த நெல்லையே விதையாக உபயோகித்து நாம் பயிர் செய்து வருகிறோம். இவ்வாறு தொடர்ந்து விதையாக பயன்படுத்தி வருவதால் அவற்றின் வீரியம் குறைந்து விளைச்சலும் வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
எனவே தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து தரமான விதை நெல்லை உற்பத்தி செய்து பயரிடுவதன் மூலம் மகசூல்
அதிகரிக்கும்.
தரமான விதை
பாரம்பரிய குணங்கள் கொண்ட, அடர்த்தியான, வீரியமுள்ள விதையாக இருக்க வேண்டும். மேலும் களை, பிற ரகங்கள் கலப்பில்லாமலும், பூச்சி, பூஞ்சாணங்களால் தாக்கப்படாமலும், தூசி துரு இல்லாமலும், முளைப்புத்திறன் அதிகமாகவும் இருக்க வேண்டும்.
விதை நேர்த்தி
மேற்கண்ட தரமான விதையை பெற உப்பு கரைசல் விதை நேர்த்தியும், பெவிஸ்டின் பூஞ்சான விதை நேர்த்தியும் செய்ய வேண்டும். வீரியமான, அடர்த்தியான, அதிக முளைப்புத்திறன் உள்ள சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும்.
விதை நெல்லை ஊறவைக்கும் போது நீர் சுத்தமானதாக இருக்க வேண்டும். இதனால் நீர் மூலம் பரவும் நோய் வராமல் தடுக்கலாம்.
நாற்றங்கால் தேர்வு
பயரில் கலப்பு வருவதை தடுக்க முன்பு பயரிட்ட நிலமல்லாத நாற்றாங்களாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
நாற்றங்காலுக்கு அடியுரம்
குறுகிய கால நெல் ரகத்திற்கு, 13-14 நாள்கள் உள்ள நாற்றுக்கு ஒரு சென்ட்க்கு 2 கிலோ டிஏபியும் (நாற்று எடுக்கும் போது வேர் அறுபடமால் இருக்க பச்சை பிடிக்க) நாற்றுவிட்ட 10-ம் நாள் கால் கிலோ பியூரடானும் இடவேண்டும்.
மத்திய கால நெல் ரகத்திற்கு, 20-25 நாள்கள் உள்ள நாற்றுக்கு ஒரு சென்ட்க்கு 2 கிலோ டிஏபியும், நாற்றுவிட்ட 10-ம் நாள் கால் கிலோ பியூரடானும் இடவேண்டும்.
நீண்ட கால நெல் ரகத்திற்கு 25-30 நாட்கள் உள்ள நாற்றுக்கு ஒரு சென்ட்க்கு 2 கிலோ டிஏபியும், நாற்றுவிட்ட 10-ம் நாள் கால் கிலோ பியூரடானும் இடவேண்டும்.
வயல் தயார் செய்தல்
குறுகிய கால நெல் ரகத்துக்கு யூரியா 50, சூப்பர் 125, பொட்டாஷ் 20 மற்றும் ஒரு ஏக்கருக்கு 20 வண்டி தொழு உரம் இட வேண்டும்.
மத்திய கால நெல் ரகத்துக்கு யூரியா 50, சூப்பர் 125, பொட்டாஷ் 30 மற்றும் ஒரு ஏக்கருக்கு 20 வண்டி தொழு உரம் இட வேண்டும்.
நீண்ட கால நெல் ரகத்துக்கு யூரியா 50, சூப்பர் 125, பொட்டாஷ் 40 மற்றும் ஒரு ஏக்கருக்கு 20 வண்டி தொழு உரம் இட வேண்டும்.
நடவு முறை
குறுகிய கால நெல் ரகத்துக்கு 20ல10 செ.மீ. இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 நாற்று வீதம் 1 அங்குல ஆழத்தில் நடவு செய்யவேண்டும்.
மத்திய கால நெல் ரகத்துக்கு 20ல15 செ.மீ. இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 நாற்று வீதம் 1 அங்குல ஆழத்தில் நடவு செய்யவேண்டும்.
நீண்ட கால நெல் ரகத்துக்கு 20ல20 செ.மீ. இடைவெளியில் ஒரு குத்துக்கு 2 நாற்று வீதம் 1 அங்குல ஆழத்தில் நடவு செய்யவேண்டும். 8 அடிக்கு 1 அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு முடிந்த பின் ஒரு வாரம் வரை 2 செ.மீ. நீர் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் 30-வது நாள், வயலில் இருந்து நீர் முழுவதும் வடித்து ஓரிருநாள்கள் அந்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதால் மண்ணுக்குள் காற்றோட்டம் அதிகமாகி வேரின் வளர்ச்சி கூடி தூர்கள் அதிகரிக்கும்.
அதன் பின் தூர்கள் பிடிக்கும் போது (தலை பருவம்) 5 செ.மீ. நீர் தேங்கியிருக்கமாறு பார்த்துக் கொள்ளவும். எக்காரணத்தாலும் பூட்டை வரும் சமயம், பூக்கும் சமயம், பால் பிடிக்கும் சமயங்கலில் நீர் தட்டுப்பாடில்லாமல் கவனித்து கொள்ள வேண்டும். இல்லையெனில் நெல் மணியின் எடை குறைந்து மகசூல் பாதிக்கப்படும். முதிர்ச்சி பருவத்தில் அறுவடைக்கு 15 நாள்களுக்கு முன்பாக தண்ணீர் சீராக வடித்து பயிரை பராமரிக்கலாம்.
களைக் கட்டுப்பாடு
களைகளை ஆரம்பத்திலிருந்தே கட்டுப்படுத்துவகு மிகவும் அவசியம். இதற்காக நாற்று நட்ட மூன்றாவது நாள்களுக்குள் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் பூட்டோகுளோர் களைக்கொல்லியை 20 கிலோ மணலுடன் கலந்து வயலில் தெளித்து விட வேண்டும். மேலும் 30-35 நாள்களுக்குள் ஒரு கைக்களை எடுப்பது மிகவும் அவசியம்.
மேலுரம்
நெல் விதைப்பயிருக்கு மூன்று முறை மேலுரங்கள் இடவேண்டும். யூரியாவை இரண்டு மேலுரங்களாக முதல் களை எடுத்தவுடன் ஒரு முறையும், பூக்கும் சமயத்தில் இன்னொரு முறையும், மூன்றாவது மேலுரம் பொட்டாஷை கதிர் பால் பிடிக்கும் சமயத்திலும் இட வேண்டும். நீங்கள் தேர்ந்தெடுத்த நெற்பயிரின் வயதுக்கேற்றவாறு மேலுரம் அளவு மாறும்.
குறுகிய கால நெல் ரகத்திற்கு முதல் முறையாக 25 கிலோ யூரியாவும் இரண்டாவது முறையாக 25 கிலோ யூரியாவும், பொட்டாஷ் முதல் முறையாக 20 கிலோவும் இடவேண்டும்.
மத்திய கால நெல் ரகத்திற்கு முதல் முறையாக 25 கிலோ யூரியாவும் இரண்டாவது முறையாக 25 கிலோ யூரியாவும், பொட்டாஷ் முதல் முறையாக 30 கிலோவும் இடவேண்டும்.
நீண்ட கால நெல் ரகத்திற்கு முதல் முறையாக 25 கிலோ யூரியாவும் இரண்டாவது முறையாக 25 கிலோ யூரியாவும், பொட்டாஷ் முதல் முறையாக 40 கிலோவும் இடவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
விதைப் பயிர்களையும் நோய் தாக்குதல் இன்றி பாதுகாப்பது தரமான விதை உற்பத்திக்கு மிகவும் அவசியம். எனவே அவ்வப்போது தென்படுகின்ற பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
கலவன் நீக்கும் தருணம்
பூக்கும் முன் அதிக உயரம் மற்றும் மிகவும் குட்டையான செடிகள், மிகவும் சீக்கிரமாக பூக்கும் செடிகள் நீக்கப்பட வேண்டிய கலவன்களாகும். பூக்கும் தருணத்தில் மிகவும் காலதாமதாமாகப் பூக்கும் செடிகள், பொட்டு நெல் ஆகியவை நீக்கப்பட வேண்டிய கலவன்களாகும். அறுவடைக்கு முன்பு மீசை நெல் நீக்கப்பட வேண்டிய கலவன் ஆகும். அறுவடையின் போது விதைப்பயிர் மணியின் பருமனுக்கு ஒத்துப் பார்த்து நீக்கப்பட வேண்டிய சன்னம் அல்லது குண்டு நெல் விதை ஆகியவை நீக்கப்பட வேண்டிய கலவன்களாகும்
காயமின்றி கதிரடித்தல்
அறுவடை செய்த கதிர்களை அடிக்கும் போது விதையின் ஈரப்பதம் 15 முதல் 18 சதம் வரை இருத்தல் வேண்டும். இந்த ஈரப்பதமானது விதையில் மெத்தை போல் செயல்பட்டு நாம் அடிக்கும் வேகத்துக்கு ஈடுகொடுத்து விதைகளுக்கு உள்ளேயும் (அ) வெளிக்காயங்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது.
விதைகளை உலர்த்துதல்
விதைகளை வெயிலில் உலர்த்தும் போத தினமும் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும் பின்னர் மாலை 3 மணி முதல் 5 வரையிலும் உலர்த்துதல் நல்லது. 12 மணி முதல் 3 மணி வரையில் உள்ள காலத்தை தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். ஏனெனில் இந்த இடைக்கால நேரத்தில் சூரியனின் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாகி விதையின் தரம் மிகவும் பாதிக்கப்படும்.
விதை சேமிப்பு
குறைந்த கால சேமிப்புக்கு விதைகளை 13 சதவீத ஈரப்பதத்திற்கு காய வைத்து துணிப்பைகளிலோ அல்லது சாக்குப் பைகளிலோ நிறைத்து சேமிக்க வேண்டும். நீண்ட காலம் விதைகளை சேமிக்க விதைகளின் ஈரப்பதத்தை 9 சதவீத அளவிற்குக் குறைத்து காற்றுப்புகாத பாலீதின் பைகளில் சேமித்து வையுங்கள்.
விதை நேர்த்தி
விதைகளை சேமிக்கும் முன் பூஞ்சாணக் கொல்லி கொண்டு விதை நேர்த்தி செய்யுங்கள். இதற்கு பெவிஸ்டின் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் என்ற விகித்தில் கலக்க வேண்டும். இதற்குப் பதிலாக விதைகளை குளோரினேற்றம் செய்தும் சேமிக்கலாம்.