100 ஆண்டு கனவு நிறைவேறியது தயார் நிலையில் காழியூர் - அத்தி மேம்பாலம்
செய்யாறு, டிச. 8: செய்யாறு தொகுதியில் ரூ.11 கோடியில் கட்டப்பட்ட காழியூர் - அத்தி மேம்பாலப் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கனவு நிறைவேறியதால் 20-க்கும் மேற்பட்ட க
வேலூர்100 ஆண்டு கனவு நிறைவேறியது தயார் நிலையில் காழியூர் - அத்தி மேம்பாலம்
செய்யாறு, டிச. 8: செய்யாறு தொகுதியில் ரூ.11 கோடியில் கட்டப்பட்ட காழியூர் - அத்தி மேம்பாலப் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கனவு நிறைவேறியதால் 20-க்கும் மேற்பட்ட க
செய்யாறு, டிச. 8: செய்யாறு தொகுதியில் ரூ.11 கோடியில் கட்டப்பட்ட காழியூர் - அத்தி மேம்பாலப் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளது. இப்பகுதி மக்களின் 100 ஆண்டு கனவு நிறைவேறியதால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
செய்யாறு தொகுதியைச் சேர்ந்த செய்யாறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காழியூர் கிராமத்தில் இருந்து, அனக்காவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அத்தி கிராமத்திற்கிடையே செய்யாறு ஆறு செல்கிறது.
ஆற்றுக்கு தென்கரையில் உள்ள அத்தி, இளநீர்குன்றம், கீழ்நீர்குன்றம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், நீதிமன்றம், காவல் நிலையம், அரசு அலுவலகங்களுக்கு சென்று வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்து வந்தனர். பல கி.மீ. தூரம் சுற்றிக் கொண்டு மாங்கால் அல்லது வந்தவாசி பகுதிக்கு சென்று பின்னரே செய்யாறுக்கு வர வேண்டிய நிலை.
செய்யாற்றுக்கு தென்கரை மற்றும் வடகரைப் பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்கள், செய்யாறு நகருக்கு எளிதாகச் சென்று வர ஆற்றில் மேம்பால அமைக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அரசிடம் கோரி வந்தனர்.
இந்நிலையில் ஆற்றின் குறுக்கே காழியூர் - அத்தி இடையே சுமார் ரூ.11 கோடியில் நபார்டு வங்கி உதவியுடன் மேம்பாலப் பணி தொடங்கியது. தற்போது பணிகள் முழுவதும் பூர்த்தியடைந்து போக்குவரத்துக்குத் தயார் நிலையில் உள்ளது.
பஸ்கள் இயக்க கோரிக்கை
காழியூர் - அத்தி மேம்பாலம் வழியாக செய்யாறில் இருந்து புளியரம்பாக்கம், வேளியநல்லூர், காழியூர், அத்தி, இளநீர்குன்றம், சேத்பட் பெருநகர் வழியாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மானாமதி, உத்திரமேரூர், காஞ்சிபுரம் மற்றும் வந்தவாசி பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் புதிய நகர பேருந்துகளை இயக்க வேண்டும்.
மேலும் மானாமதி, உத்திரமேரூர், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மகாபலிபுரம் போன்ற பகுதிகளுக்கு தொலைத்தூர அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
தற்போது காஞ்சிபுரத்தில் இருந்து அத்தி கிராமத்திற்கு இயக்கப்படும் நகர பேருந்தை செய்யாறு வரை நீட்டிக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.