தேச பக்தியை வளர்க்கும் பள்ளி
செய்யாறு, டிச. 18: செய்யாறு அருகேயுள்ள அனக்காவூர் தொடக்கப்பள்ளி கல்வி போதிப்பதுடன் மாணவர்களுக்கு தேச பக்தியையும் வளர்க்கிறது. செய்யாற்றை அடுத்த அனக்காவூர் கிராம காலனியில் அமைந்துள்ள இப் பள்ளியில் 1 ம
வேலூர்தேச பக்தியை வளர்க்கும் பள்ளி
செய்யாறு, டிச. 18: செய்யாறு அருகேயுள்ள அனக்காவூர் தொடக்கப்பள்ளி கல்வி போதிப்பதுடன் மாணவர்களுக்கு தேச பக்தியையும் வளர்க்கிறது. செய்யாற்றை அடுத்த அனக்காவூர் கிராம காலனியில் அமைந்துள்ள இப் பள்ளியில் 1 ம
செய்யாறு, டிச. 18: செய்யாறு அருகேயுள்ள அனக்காவூர் தொடக்கப்பள்ளி கல்வி போதிப்பதுடன் மாணவர்களுக்கு தேச பக்தியையும் வளர்க்கிறது.
செய்யாற்றை அடுத்த அனக்காவூர் கிராம காலனியில் அமைந்துள்ள இப் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 53 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இப் பள்ளியில் முன்பு பணிபுரிந்த தலைமையாசிரியர் தா.வேம்பன், பள்ளி மாணவர்களிடையே தேசபக்தியை வளர்க்க வேண்டும் என்ற நோக்கோடு கிராமக்கல்விக்குழு, கல்வி அதிகாரிகளின் அனுமதி பெற்று வருகைப் பதிவேட்டின் போது மாணவர்கள் வந்தே மாதரம் என்று கூறி தேச பக்தியை வளர்க்கும் பழக்கத்தை உண்டாக்கினார்.
அவர் ஓய்வுபெற்ற பின், தலைமை ஆசிரியராகப் பதவியேற்ற தேன்மொழியும், ஆசிரியர் கிரிஜாவும் தொடர்ந்து அப்பணியை செய்து வருகின்றனர். பள்ளி சுவர் முழுவதும் மாநிலங்கள், மாவட்டங்கள், தலைநகரங்கள், உயிர்மெய் எழுத்துகள், ஆங்கில எழுத்துகள், எண் கணிதம், உருவங்கள், விஞ்ஞானிகள், தேசத் தலைவர்கள் மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் போன்றவற்றை மாணவர்கள் மனதில் எளிதாகப் பதியும் வகையில் வரைந்துள்ளனர்.
பள்ளியில் பாதுகாப்புக்குழு, சுகாதாரக்குழு, இறைவணக்கக்குழு என பலவகைக் குழுக்களை உருவாக்கி தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே ஒழுக்கம், பாதுகாப்பு உணர்வுகளையும் வளர்த்து வருகின்றனர்.