செய்யாறு பஸ்நிலையத்தில் கால அட்டவணை வைக்கப்படுமா?
செய்யாறு, பிப்.17: செய்யாறு பஸ்நிலையத்தில் பஸ்களின் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். செய்யாறு பஸ்நிலையத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், வந்தவாசி, ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமல
வேலூர்செய்யாறு பஸ்நிலையத்தில் கால அட்டவணை வைக்கப்படுமா?
செய்யாறு, பிப்.17: செய்யாறு பஸ்நிலையத்தில் பஸ்களின் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். செய்யாறு பஸ்நிலையத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், வந்தவாசி, ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமல
செய்யாறு, பிப்.17: செய்யாறு பஸ்நிலையத்தில் பஸ்களின் கால அட்டவணை இல்லாததால் பயணிகள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
செய்யாறு பஸ்நிலையத்துக்கு சென்னை, காஞ்சிபுரம், வந்தவாசி, ஆரணி, போளூர், செங்கம், திருவண்ணாமலை, ஆர்க்காடு, வேலூர், குடியாத்தம் ஆகிய ஊர்களிலிருந்து இருந்து 100-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், 50-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் வந்து செல்கின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 10 ஆயிரம் பயணிகள் செய்யாறு பஸ் நிலையத்தை கடக்கின்றனர்.
இந்த பயணிகளுக்கு உதவக்கூடிய வகையில் பஸ்களின் வருகை நேரம், புறப்படும் நேரம் குறித்த தகவல்களைத் தெரிவிக்கும் கால அட்டவணை எதுவும் வைக்கப்படவில்லை.
இதனால் பயணிகள் அருகில் உள்ள கடைகாரர்களிடமோ, சக பயணிகளிடமோ, பேருந்து நடத்துநர்களிடமோ கேட்க வேண்டிய நிலை உள்ளது. சிலர் தவறான தகவல்களை தருவதால் சிரமத்துக்கு ஆளாக வேண்டியுள்ளது.
செய்யாறு வழியாக பெங்களூர், சேலம், திருப்பதி, மேல்மருவத்தூர், திண்டிவனம்,புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு தொலைதூர பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்கள் வருவது குறித்தோ, அவற்றின் வருகை நேரம் குறித்தோ செய்யாறு நகர மக்களுக்கே தெரியவில்லை.
எனவே திருவத்திபுரம் நகராட்சி சார்பில் பஸ்களின் கால அட்டவணை வைக்க வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.