பிரம்மதேசம் - ஓச்சேரி இடையே பாலாற்றில் ரூ. 10 கோடியில் பாலம்
செய்யாறு, ஜன. 2: பிரம்மதேசம் - ஓச்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே ரூ. 10 கோடியில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பாலத்தால் திருப்பதியில் இருந்து புதுச்சேரி மற்றும் தென்மாவட்டப் பகுதிகளு
வேலூர்பிரம்மதேசம் - ஓச்சேரி இடையே பாலாற்றில் ரூ. 10 கோடியில் பாலம்
செய்யாறு, ஜன. 2: பிரம்மதேசம் - ஓச்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே ரூ. 10 கோடியில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த பாலத்தால் திருப்பதியில் இருந்து புதுச்சேரி மற்றும் தென்மாவட்டப் பகுதிகளு
செய்யாறு, ஜன. 2: பிரம்மதேசம் - ஓச்சேரி இடையே பாலாற்றின் குறுக்கே ரூ. 10 கோடியில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த பாலத்தால் திருப்பதியில் இருந்து புதுச்சேரி மற்றும் தென்மாவட்டப் பகுதிகளுக்கு பயண தூரம் குறையும்.
வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரம்மதேசம், நாட்டேரி, அரியூர், புதூர், வெங்களத்தூர், செய்யனூர்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அத்தியவாசியப் பணிகளுக்காகவும், வியாபார நிமித்தமாகவும் மிக அருகில் உள்ள ஓச்சேரிக்கு பாலாற்றைக் கடந்து சென்று வருகின்றனர். பாலாற்றில் வெள்ளம் வந்தால் புதுப்பாடி, ஆர்க்காடு, ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, காவேரிப்பாக்கம் பகுதிகளுக்கு செல்ல சிரமப்பட வேண்டிய நிலை இருந்தது.
இதனால் பிரம்மதேசம் - ஓச்சேரி இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் செய்யாறு எம்எல்ஏ விஷ்ணுபிரசாத் ஆகியோரின் தீவிர முயற்சியால் நபார்டு வங்கி உதவியுடன் ரூ. 10 கோடியில் மேம்பாலம் கட்ட அரசு அனுமதி வழங்கியுள்ளது. இப்பணிக்காக வரும் ஜனவரி 31-ம் தேதி டெண்டர் விடப்படுகிறது. வரும் மார்ச் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டு 2012 ஜூன் மாதம் பணிகள் முடிவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
335 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலம், 30 மீட்டர் உயரத்தில் கட்டப்படவுள்ள மேம்பாலத்தில் 18 தூண்கள் அமைக்கப்படுகிறது. பாதசாரிகள் நடந்துசெல்ல வசதியாக பாலத்தின் இருபுறங்களிலும் 2.25 மீட்டர் அகலத்தில் நடைபாதை அமைக்கப்படுகிறது.
இப்புதிய பாலத்தால் வந்தவாசி செய்யாறு, கலவை, புதுப்பாடி ஆகிய பகுதிகளிலிருந்து பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை எளிதாக அடையலாம். மேலும் ஆந்திரத்தில் இருந்து செய்யாறு, வந்தவாசி வழியாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டப் பகுதிகளுக்கான பயண நேரமும் குறையும்.