முகப்பு
வேலூர்

திருவத்திபுரம் நகராட்சிக்கு ஆணையர் இல்லாததால் பணிகள் முடக்கம்

செய்யாறு, ஜன.5: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு கடந்த ஓராண்டாக ஆணையர் நியமிக்கப்படாததால் அலுவலகப் பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.   திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது வருவாய்க் கோட

வேலூர்

திருவத்திபுரம் நகராட்சிக்கு ஆணையர் இல்லாததால் பணிகள் முடக்கம்

செய்யாறு, ஜன.5: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு கடந்த ஓராண்டாக ஆணையர் நியமிக்கப்படாததால் அலுவலகப் பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.   திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது வருவாய்க் கோட

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:01 PM
பகிர்:

செய்யாறு, ஜன.5: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சிக்கு கடந்த ஓராண்டாக ஆணையர் நியமிக்கப்படாததால் அலுவலகப் பணிகள் முடங்கியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது வருவாய்க் கோட்டமாக உள்ளது செய்யாறு கோட்டம். இதில் உள்ள திருவத்திபுரம் நகராட்சியில் துப்புரவுப் பணியாளர்கள், அலுவலர்கள் உள்பட 104 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இங்கு நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த சி.டி.சச்சிதானந்தன் அக்டோபர் 2009-ல் ஓய்வு பெற்றார். அதற்கு பிறகு ஆணையர் நியமிக்கப்படவில்லை. மற்ற நகராட்சிகளில் பணியாற்றி வரும் அலுவலர்கள் அவ்வப்பொழுது கூடுதல் பொறுப்பாக இதை கவனித்து வருகின்றனர்.

கடந்த 3 மாதங்களாக, வந்தவாசி நகராட்சி ஆணையர் உசேன் பாரூக் மன்னர்,  திருவத்திபுரம் நகராட்சியின் ஆணையராக கூடுதல் பொறுப்பை கவனித்து வருகிறார். அவரும் வாரத்துக்கு ஓரிரு நாள்கள் மட்டுமே வருவதாகக் கூறப்படுகிறது.

  இதனால் துப்புரவுப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், நகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணித்தல், ஒப்பந்தப் பணி முடித்தவர்களுக்கு தொகை வழங்குதல், குடிநீர்ப் பிரச்னை, பொது சுகாதாரப் பணிகள் என நகரில் பல பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே திருவத்திபுரம் நகராட்சிக்கு உடனடியாக புதிய ஆணையரை நியமிக்க வேண்டும் என நகராட்சிப் பணியாளர்களும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →