தனியார் நிறுவன தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
செய்யாறு, ஜூலை 25: செய்யாறில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரப்பர் பெல்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். செய்யாறு மாங்கால் சிப்க
செய்யாறு, ஜூலை 25: செய்யாறில் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ரப்பர் பெல்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
செய்யாறு மாங்கால் சிப்காட்டில், ரப்பர் பெல்ட் தயாரிக்கும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில் ஒரு பகுதியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Advertisement
பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனே வேலை வழங்க வேண்டும், 12 மணி நேர வேலை என்பதை 8 மணி நேரமாக மாற்ற வேண்டும், அரசு நிர்ணயித்துள்ள கூலியை வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோட்டாட்சியர் பிரியாவிடம் மனு அளித்தனர் (படம்).
ஏஐடியூசி தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ்.லோகன் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.ஜகாங்கீர் சிறப்புரையாற்றினார். சங்கப் பொருளாளர் எஸ்.சுரேஷ், துணைத் தலைவர் ஜி.குறள்முரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.