காந்திசாலையில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு எதிர்ப்பு
செய்யாறு,மார்ச் 2: செய்யாறில் மகாத்மா காந்தி பெயரைத் தாங்கியுள்ள காந்தி சாலையில் டாஸ்மாக் கடை வைத்திருப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். செய்யாறு திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது வர
வேலூர்காந்திசாலையில் டாஸ்மாக் கடை நடத்துவதற்கு எதிர்ப்பு
செய்யாறு,மார்ச் 2: செய்யாறில் மகாத்மா காந்தி பெயரைத் தாங்கியுள்ள காந்தி சாலையில் டாஸ்மாக் கடை வைத்திருப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். செய்யாறு திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது வர
செய்யாறு,மார்ச் 2: செய்யாறில் மகாத்மா காந்தி பெயரைத் தாங்கியுள்ள காந்தி சாலையில் டாஸ்மாக் கடை வைத்திருப்பதற்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
செய்யாறு திருவண்ணாமலை மாவட்டத்தின் இரண்டாவது வருவாய் கோட்டமாகவும், கல்விச்சேவைக்கும் சிறப்பிடம் பெற்ற ஊராகும். இவ்வளவு சிறப்பிடம் பெற்ற செய்யாறில் தேசத் தந்தையான மகாத்மா காந்தி நினைவாக இருக்கும் வகையிலும், இப்போதைய இளைய தலைமுறையினர் மறக்காமல் இருக்க இப்பகுதியில் ஒரேயொரு சாலைக்கு காந்தி சாலை என்ற பெயரைச் சூட்டி மகிழ்ந்தனர்.
இந்த சாலை வழியாகத்தான் திருப்பதி,சித்தூர்,வேலூர்,ஆற்காடு போன்ற பகுதிகளில் இருந்து செய்யாறு,வந்தவாசி வழியாக புதுச்சேரி, தென் மாவட்டப்பகுதிகளுக்கு அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டும். மேலும், வேறு சாலை வசதியில்லாததால் செய்யாறு பகுதியைச் சேர்ந்த நகர, கிராம மக்கள் அனைவரும் இந்த சாலையைத்தான் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் உள்ளது.
ஒரே சாலையாக உள்ள இந்த சாலையில் கோபால் தெருவுக்கு மிக அருகில் டாஸ்மாக் மதுக்கடை அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ளது.
இக்கடையில் மதுகுடிக்க தனியாக பார் எதுவும் இல்லாததால், மது பிரியர்கள் மதுவை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள கடைகளில் அமர்ந்து குடித்து அப்பகுதியில் உள்ள வணிகர்களுக்கும், பொது மக்களுக்கும் வீண் தொல்லைகள் கொடுத்த வண்ணம் உள்ளனர்.
மேலும், திருமணம், விழாக்காலங்கள் மற்றும் சந்தை தினமான ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் மது அருந்துவோர் அட்டகாசத்துக்கு அளவே இல்லை. இதனால், இப்பகுதி வழியாக செல்ல பொது மக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, இந்த டாஸ்மாக் கடையை ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மாற்ற வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.