புத்துயிர் பெறும் வாரச் சந்தைகள்
செய்யாறு, பிப். 4: செய்யாறு பகுதியில் நின்றுபோயிருந்த கிராம வாரச் சந்தைகள் புத்துயிர் பெற்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற
வேலூர்புத்துயிர் பெறும் வாரச் சந்தைகள்
செய்யாறு, பிப். 4: செய்யாறு பகுதியில் நின்றுபோயிருந்த கிராம வாரச் சந்தைகள் புத்துயிர் பெற்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற
செய்யாறு, பிப். 4: செய்யாறு பகுதியில் நின்றுபோயிருந்த கிராம வாரச் சந்தைகள் புத்துயிர் பெற்று மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
செய்யாறை அடுத்த கூழமந்தல் கிராமத்தில் புதன்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வந்தது. இந்த சந்தை 300 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவந்தாம். இந்த சந்தையில் கூடும் பல்வேறு வியாபாரிகள் போடும் கூச்சல் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கேட்குமாம்.
ஆடு, மாடு, கோழிகள், தானியங்கள், காய்கறிகள், துணிக்கடைகள் என புகழ்பெற்று விளங்கிய இந்த வாரச் சந்தை பல்வேறு காரணங்களால் 50 ஆண்டுகளுக்கு முன் தடைபட்டு நின்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஊராட்சி மன்றத் தலைவர் மு.தணிகைவேல் மற்றும் கிராம இளைஞர்களின் முயற்சியால் கூழமந்தல் வாரச்சந்தை வியாழக்கிழமை தோறும் செயல்படும் என அறிவிக்கப்பட்டு பிப்ரவரி 2-ம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
தற்போது புதிய சந்தையில் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருள்கள், தின்பண்டங்கள் மற்றும் வீட்டுக்குத் தேவையான பொருள்கள் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
செய்யாறு தாலுகாவைச் சேர்ந்த உக்கல், ஆக்கூர், வெள்ளாமலை, மகாஜனம்பாக்கம், நேத்தப்பாக்கம், குண்ணவாக்கம், பெண்டை, கல்லேரி, உக்கம்பெரும்பாக்கம், நெமிலி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான மக்கள் சந்தைக்கு வந்திருந்தனர்.
காஞ்சிபுரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் இங்கு கடைகள் வைத்து சென்னை கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே பொருள்களை விற்றதால் மக்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.
காஞ்சிபுரம் - வந்தவாசி பிரதான சாலையில் இக்கிராமம் அமைந்துள்ளதால் இவ்வூர் வழியாக கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோரும் சந்தையில் நின்று பொருள்களை வாங்கிச் சென்றனர்.
இதேபோன்று தூசி கிராமத்திலும் நின்று போயிருந்த வாரச்சந்தை தற்போது ஞாயிற்றுக்கிழமை தோறும் கடந்த 2 மாதங்களாக செயல்பட்டு வருகிறது.
வளர்ந்துவிட்ட நகரமான செய்யாறில் பிரதி ஞாயிற்றுக்கிழமை தோறும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வாரச் சந்தை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.