கரும்பு லோடு வாகனங்களால் அதிகரிக்கும் விபத்துகள்
போளூர், பிப். 23: போளூரை அடுத்த கரைப்பூண்டி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வரும் கரும்பு லோடு வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. போளூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் பணப்பயிரா
போளூர், பிப். 23: போளூரை அடுத்த கரைப்பூண்டி அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு வரும் கரும்பு லோடு வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
போளூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும்பாலும் பணப்பயிரான கரும்பையே நடவு செய்கின்றனர். வெட்டப்படும் கரும்பை ஆலைக்கு விவசாயிகள் லாரி மற்றும் டிராக்டரில் அனுப்புகின்றனர்.
அப்படி ஆலைக்கு வரும் கரும்பு பாரம் ஏற்றிய வாகனங்களை ஆலைக்குள் நிறுத்தாமல் போளூர்-சேத்துப்பட்டு சாலையின் ஓரம் நிறுத்தாமல் நடு வழியில் நிறுத்தப்படுகின்றன.
இதனால் போளூர்-சென்னை செல்லும் பேருந்து 40-ம், நகர பஸ்கள் 5-ம், தனியார் வாகனங்கள் 10-ம், மினி பஸ் 4 பாதிக்கப்படுகின்றன. இதோடு மட்டுமன்றி போளூரில் வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம்,பத்திரப்பதிவு அலுவலகம், தீயணைப்பு நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம்,மாவட்ட காண்காணிப்பு அலுவலகம், பள்ளிக்கு வரும் மாணவர்கள் என ஏராளமானோர் இந்த வழியாகச் செல்ல முடியாமல் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் நெரிசல் நிறைந்து காணப்படுகிறது.
சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்துகள் ஏற்பட வழிவகுக்கிறது.
ஆகவே, சர்க்கரை ஆலைக்கு வரும் வாகனங்களை ஆலைக்குள்ளேயே நிறுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிவருகின்றனர்.