திரையரங்கு மேற்கூரை இடிந்து விழுந்தது; 3 பேர் சாவு
: திருப்பத்தூரில் திரையரங்கத்தின் மேற்கூரை பக்கவாட்டு சுவருடன் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில், 3 பேர் உயிரிழந்தனர்.
: திருப்பத்தூரில் திரையரங்கத்தின் மேற்கூரை பக்கவாட்டு சுவருடன் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது. இதில், 3 பேர் உயிரிழந்தனர்.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் பஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டர் தொலைவில் உள்ள புதுப்பேட்டையில் திரையரங்கு ஒன்று அமைந்துள்ளது. 1992-ல் கட்டப்பட்ட இத்திரையரங்கில் பகல் காட்சியை 65 பேர் பார்த்தனர்.
மாலையில் திருப்பத்தூர் நகரில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில், மாலை 5 மணியளவில் திரைப்படம் முடிந்து, பார்வையாளர்கள் வெளியேறும்போது, திரையரங்கின் மேற்கூரையுடன் பக்கவாட்டு சுவர் விழுந்துள்ளது.
Advertisement
Advertisement
இதில், புதுப்பேட்டையில் உள்ள பாபு நகரைச் சேர்ந்த ராஜசேகர் (45), தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பகுதி 1-ஐ சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியர் கோபிநாத் (45), கேத்தாண்டப்பட்டியை அடுத்த கூத்தாண்டகுப்பத்தை சேர்ந்தவரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினருமான சிவா (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும், தமிழரசன் (39), சிவக்குமார் (33), ஸ்ரீதர் (34), இளம்பராதி (24) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் காயமடைந்தனர். அவர்களில் 7 பேர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தகவலின்பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சார் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார்.
ஆட்சியர் பொ.சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஐ.ஈஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டனர்.