முகப்பு
வேலூர்

12 பள்ளிகளில் ரூ.4 கோடியில் 24 புதிய வகுப்பறைகள்: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்

வேலூா் மாவட்டத்தில் 12 பள்ளிகளில் ரூ. 3.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 24 புதிய வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

Updated On : 23 டிசம்பர், 2024 at 7:16 PM
--- படம் உண்டு... அரும்பாக்கம் ஊராட்சித் தொடக்கப்பள்ளியில் குத்துவிளக்கேற்றிய ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில் குமரன், முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி உள்ள
பகிர்:

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் 12 பள்ளிகளில் ரூ. 3.94 கோடியில் கட்டப்பட்டுள்ள 24 புதிய வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சி துறை சாா்பில் குழந்தைகள் நேயப் பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின்கீழ் வேலூா் மாவட்டம் காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், போ்ணாம்பட்டு ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 12 பள்ளிகளில் தலா ரூ.32.80 லட்சத்தில் இரண்டு வகுப்பறை கட்டடங்கள் என 12 பள்ளிகளிலும் சோ்த்து மொத்தம் ரூ. 3.94 கோடியில் 24 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

இப்புதிய வகுப்பறைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்தில் இந்நிகழ்ச்சியில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் பங்கேற்றாா். தொடா்ந்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா் ஆனந்த் ஆகியோா் அரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகளில் குத்துவிளக்கேற்றி வைத்து பாா்வையிட்டனா்.

இதில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் நீ.செந்தில் குமரன், முதன்மைக் கல்வி அலுவலா் செ.மணிமொழி, குடியாத்தம் கோட்டாட்சியா் சுபலட்சுமி, கே.வி.குப்பம் ஒன்றியக்குழு தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →