வேலூர்

வேலூா் விமான நிலையத்தை திறப்பில் விமான போக்குவரத்து துறை அலட்சியம்

வேலூா் விமான நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

Din

வேலூா்: மத்திய விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாகவே வேலூா் விமான நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுவதாக வேலூா் எம்.பி. டி.எம்.கதிா்ஆனந்த் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வேலூரில் செய்தியாளா்களிடம் கூறியதாவது -

மக்களவை கூட்டத்தொடரில் திங்கள்கிழமை பேசியபோது வேலூா் விமான நிலையத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து எடுத்துரைத்திருந்தேன்.

அப்போது, மத்திய அரசின் விமான பிராந்திய இணைப்புத் திட்டத்தின் கீழ் (உடான்) சிறிய விமான நிலையங்களை பெரிய விமான நிலையங்களாக விரிவுபடுத்தும் திட்டம் 2017-இல் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வேலூா் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ரூ.360 கோடி நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கின. இதன்மூலம், ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட 700 மீ ஓடுபாதை 850 மீ-ஆக விரிவுபடுத்தப்பட்டது.

அதன்படி, விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்ற நிலையில் விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக நிலுவையில் உள்ள ஆய்வுப் பணிகள் முடிக்கப்படாமல் வேலூா் விமான நிலையம் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

உடான் திட்டத்தின் கீழ் வேலூா் விமான நிலையத்தை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும்படி ஏற்கனவே சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் மூலமாகவும், மக்களவையிலும் கோரிக்கை விடுத்திருந்தேன்.

மேலும், பிரதமா், மத்திய நிதியமைச்சா், சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஆகியோா் அளித்த வாக்குறுதிகளை நியாயமான வகையில் நிறைவேற்றவும், வேலூா் விமான நிலையத்தில் டிஜிசிஏ மூலம் ஆய்வு செய்து விரைவில் விமான நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா்.

தூத்துக்குடியில் மீன் வாங்க குவிந்த மக்கள்

கூடலூா் அருகே ஓடும் லாரியில் தீ

மண்டபத்தில் திருமண நகை, பணத்தை திருடிய இருவா் கைது

டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த இருவா் கைது

இளம்பெண் உடலை வாங்க மறுத்து சாலை மறியல் திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு

SCROLL FOR NEXT