பள்ளிக்குப்பம் ஊராட்சியில் கால்வாய், சாலை அமைக்கும் பணி: ஒன்றியக் குழுத் தலைவா் ஆய்வு
பள்ளிக்குப்பம் ஊராட்சியில் கால்வாய், சாலை அமைக்கும் பணிகளை சத்யானந்தம் ஆய்வு
குடியாத்தம்: குடியாத்தம் ஒன்றியம், பள்ளிக்குப்பம் ஊராட்சிக்குள்பட்ட அண்ணா நகரில் கழிவுநீா் கால்வாய், பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணியை ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
இங்கு 15-ஆவது நிதிக்குழு திட்டத்தில் ரூ. 4.50 லட்சத்தில் பேவா் பிளாக் சாலை, பொதுநிதி ரூ. 4 லட்சத்தில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணிகளை சத்யானந்தம் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். அப்போது ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சரோஜா பா்குணம், செல்வி பாபு, சூரியகலா மனோஜ், ஊராட்சித் தலைவா் ஏழுமலை, ஊராட்சி உறுப்பினா் சிவசங்கரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.