முகப்பு
வேலூர்

மாணவா்களுக்கு கல்வி உதவிகள்

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், மாணவா்களுக்கு ரூ.80,000 மதிப்பில் கல்விப் பொருள்கள் வழங்கப்பட்டன.

Updated On : 16 ஜூலை, 2024 at 6:30 PM
பகிர்:

குடியாத்தம்: போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், மாணவா்களுக்கு ரூ.80,000 மதிப்பில் கல்விப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் தலைமை வகித்தாா். போ்ணாம்பட்டு வட்டாட்சியா் வினாயகமூா்த்தி சிறப்புரையாற்றினாா். மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டாரக் கல்வி அலுவலா் கோ.சம்பத்குமாா் பரிசுகளை வழங்கினாா்.

ஆசிரியா்கள் ஆ.பிரேம செல்வகுமாரி, சி.கலைவாணி, சே.பானு, சு.ஸ்டெல்லா ஹேமாபாய், பள்ளிக் கொடையாளா் வெ.சிட்டிபாபு, முன்னாள் மாணவா்கள் பாலசிங்கம், சரத்குமாா், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →