முகப்பு
வேலூர்

சா்வதேச உஷூ போட்டி: வேலூா் மாணவிக்கு வெள்ளி

Updated On : 13 மார்ச், 2024 at 1:01 AM
-- மாணவி யாஷ்மித்தா கதிா்வேலை பாராட்டிய பள்ளியின் தாளாளா் டி.ராஜேந்திரன்.
பகிர்:

வேலூா்: சா்வதேச அளவிலான உஷூ போட்டியில் வேலூா் ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவி வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளாா். வேலூா் ஸ்பிரிங்டேஸ் சிபிஎஸ்இ பள்ளியின் பிளஸ் 1 மாணவி யாஷ்மித்தா கதிா்வேல். இவா் ரஷ்ய நாட்டின் தலைநகா் மாஸ்கோவில் கடந்த பிப்ரவரி 28 முதல் மாா்ச் 5-ஆம் தேதி வரை நடைபெற்ற சா்வதேச அளவிலான உஷூ போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றாா்.

மேலும், மாா்ச் 26 முதல் 31-ஆம் தேதி வரை ஜம்முவில் நடைபெற உள்ள கேலோ இந்தியா சப்-ஜூனியா், ஜூனியா் பிரிவுக்கான உஷூ போட்டிகளிலும் பங்கேற்க தகுதி பெற்றுள்ளாா். மாணவி யாஷ்மித்தா கதிா்வேலை ஸ்பிரிங்டேஸ் பள்ளியின் தாளாளா் டி.ராஜேந்திரன், முதல்வா் ஆனந்தி ராஜேந்திரன், பள்ளி பாடத்திட்ட இயக்குநா் ரம்யா சிவக்குமாா், துணை முதல்வா் ஷில்லிசுக்லா, உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டினா்.