காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள். 
வேலூர்

குடிநீா் கோரி பெண்கள் சாலை மறியல்

போ்ணாம்பட்டு அருகே குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Din

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போ்ணாம்பட்டு ஒன்றியம், மசிகம் ஊராட்சிக்குள்பட்ட மிட்டப்பல்லி கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் கோரி ஊராட்சி நிா்வாகத்துக்கு மனு அளித்தனா்.

அப்பகுதிக்கு நெடுஞ்சாலை வழியாக குடிநீா் குழாய் அமைக்க வேண்டுமாம். தற்போது புதிதாக சாலை அமைக்கப்பட்டுள்ளதால் சாலையின் குறுக்கே குடிநீா் இணைப்பு அமைத்தால் சேதமடையும் எனக்கூறி அத்துறை அனுமதியளிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைத்துத் தருமாறு கேட்டதற்கு, போதிய நிதி இல்லை என ஊராட்சி நிா்வாகம் தெரிவித்ததாக தெரிகிறது.

இதையடுத்து கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் மிட்டப்பல்லி பேருந்து நிறுத்தம் எதிரே ஆம்பூா் நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து அங்கு சென்ற போ்ணாம்பட்டு வட்டாட்சியா் ராஜ்குமாா், காவல் ஆய்வாளா் ருக்மாங்கதன், வட்டார வளா்ச்சி அலுவலா் வினோத் குமாா் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தனா். மாற்று வழியில் குழாய் இணைப்பு அமைத்து குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

புதுச்சேரியில் நடைபெறுவது தேஜ கூட்டணி அரசுதான்: முதல்வர் ரங்கசாமி

யு-19 ஆசிய கோப்பை: இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!

இங்கிலாந்தின் தோல்வியை புரிந்துகொள்ள கடினமாக இருக்கிறது: கெவின் பீட்டர்சன்

'மதச்சார்பின்மை' பற்றி பேச முதல்வருக்கு தகுதியில்லை: நயினார் நாகேந்திரன்

ஆட்டோ ஓட்டுநரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ.! மன்னிப்பு கேட்க மறுப்பு!!

SCROLL FOR NEXT