வேலூா்: பொன்னை ஆற்றில் மூழ்கி 3-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா்.
காட்பாடி அருகே சித்தூா் மெயின் ரோடு யாதவா் காலனி, பரமசேது கிராமத்தைச் சோ்ந்தவா் பாலாஜி. இவரது மகன் ஜோதீஸ்வரன் (8). ஞாயிற்றுக்கிழமை பாலாஜி தனது குடும்பத்தினருடன் பொன்னை ஆற்றில் குளிக்கச் சென்றாா். அப்போது ஜோதீஸ்வரன் ஆற்றில் ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கினாா். அவரது குடும்பத்தினா் சிறுவனை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவா்கள், ஜோதீஸ்வரன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா். தகவலறிந்த மேல்பட்டி போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.