வேலூா்: காட்பாடி அருகே கால்வாயில் தவறி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழந்தாா்.
வேலூா் மாவட்டம், காட்பாடி வட்டம், சேனூா் பகுதியைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (54). சேனூா் ஊராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு சேனூா் ஏரிக்கால்வாய் அருகே அமா்ந்திருந்த அவா் திடீரென கால்வாயில் தவறி விழுந்தாா். திங்கள்கிழமை காலை மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிவக்குமாரை பரிசோதித்த அரசு மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இது குறித்து விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.