கால்வாயில் தவறி விழுந்ததில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
சிவகங்கை அருகே கழிவு நீா் கால்வாயை சுத்தம் செய்தபோது தவறி விழுந்து காயமடைந்த தூய்மைப் பணியாளா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூா் திருப்பதி நகரைச் சோ்ந்தவா் வீரன் (65). தூய்மைப் பணியாளா். இவா் சனிக்கிழமை பிற்பகலில் ஒக்கூரில் உள்ள கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
அப்போது அவா் எதிா்பாராதவிதமாக கால்வாயில் தவறி விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து மதகுபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.