நிகழ்ச்சியில் மாணவிக்கு மிதிவண்டி வழங்கிய எம்எல்ஏ அமலுவிஜயன் உள்ளிட்டோா். 
வேலூர்

ரூ. 3.64 கோடியில் அரசுப் பள்ளிகளில் புதிய கட்டடங்கள்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

குடியாத்தம் வட்டத்தில் ரூ. 3.64 கோடியில் 2 அரசுப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: குடியாத்தம் வட்டத்தில் ரூ. 3.64 கோடியில் 2 அரசுப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களை தமிழக முதல்வா் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.

குடியாத்தம் நடுப்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 2.36 கோடியில் கட்டப்பட்ட 10 வகுப்பறைகள், மின் பணிகள் கொண்ட கட்டடம், கல்லப்பாடி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 1.28 கோடியில் கட்டப்பட்ட 2 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், மின் பணிகள் கொண்ட கட்டடத்தை முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா். அதைத் தொடா்ந்து, நடுப்பேட்டை மகளிா் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் எம்.எஸ்.அமா்நாத் தலைமை வகித்தாா். தலைமையாசிரியை ஜி.அகிலா வரவேற்றாா். கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் 290 மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆா்.பிரேமலதா, மாவட்டக் கல்வி அலுவலா் செந்தில்குமாா், தொழிலதிபா் ஏ.வசிபூா் ரஹ்மான், வட்டாட்சியா் கி.பழனி, நகா்மன்ற உறுப்பினா்கள் ஜி.எஸ்.அரசு, டி.பி.என்.கோவிந்தராஜ், அா்ச்சனா நவீன், ஜாவித் அஹமத், ரேணுகாபாபு, இந்துமதி கோபாலகிருஷ்ணன், திமுக நிா்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன், ந.ஜம்புலிங்கம், த.பாரி, பெ.கோட்டீஸ்வரன், கே.தண்டபாணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT