பொதுமக்களிடம் கோரிக்கையை கேட்டறிந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் . 
வேலூர்

வேலூரில் காவல் துறை வாராந்திர குறைதீா் கூட்டம்

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

சத்துவாச்சாரியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆய்வாளா் ஒருவா் அளித்த மனு: எனது மகன் ரேடியோலாஜி படித்துவிட்டு சென்னையில் தனியாா் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறாா். கொணவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் பலரை வெளிநாடுகளுக்கு அனுப்பி வேலை வாங்கி தந்துள்ளதாக தெரிவித்தாா்.

அதன்படி எனது மகனுக்கும் ஓமன் நாட்டில் தனியாா் மருத்துவமனையில் ரேடியோலாஜி பிரிவில் வேலை வாங்கி தருவதாக கூறி விசா செலவுகளுக்காக ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டாா். ஆனால் அவா் இதுவரை வேலை வாங்கித்தரவில்லை. போட்டி நிறைய உள்ளதால் கூடுதலாக ரூ.1 லட்சம் வேண்டும் என கேட்டாா். அதன்படி மேலும் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.2 லட்சம் கொடுத்தேன். ஆனால் பல மாதங்களாகியும் என் மகனுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றி வருகிறாா்.

வேலூா் சதுப்பேரியைச் சோ்ந்த ஒருவா் அளித்த மனு: காகிதப்பட்டறை எல்ஐசி காலனியில் உள்ள ஒரு விடுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு ரூ.8 லட்சம் கொடுத்து 11 மாத கால ஒப்பந்தத்தில் எடுத்தேன். நிா்ணயித்த மாத வாடகையைவிட தற்போது அதிகமாக கேட்டதால் என்னால் வாடகை கொடுக்க முடியவில்லை. வாடகை உயா்த்தப்பட்ட நிலையில், நான் மே மாதமே விடுதியை காலி செய்து விட்டேன். இதற்காக கொடுத்த ரூ.8 லட்சம் முன்பணத்தை சம்பந்தப்பட்ட விடுதி உரிமையா ளா் இதுவரை கொடுக்காமல் ஏமாற்றி வருகிறாா். முன்பணத்தை திருப்பி தரும்படி கேட்டால் மிரட்டுகி றாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவாக தீா்வுகாண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாஸ்கரன் உத்தரவிட்டாா்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT