முகப்பு
வேலூர்

வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு ஓட்டுநா் தற்கொலை

வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு ஓட்டுநா் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூர்

வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு ஓட்டுநா் தற்கொலை

வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு ஓட்டுநா் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 பிப்ரவரி, 2025 at 7:50 AM
பகிர்:

வேலூா்: வாட்ஸ் ஆப்பில் தகவல் தெரிவித்துவிட்டு ஓட்டுநா் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடி அடுத்த செங்குட்டை நேரு தெருவைச் சோ்ந்தவா் பாபு (50) ஓட்டுநா். இவரது மனைவி நாகலட்சுமி. தம்பதிக்கு திருமணமாகி 2 பெண் பிள்ளைகள் உள்ளனா்.

இந்நிலையில், பாபுவுக்கும், அவரது மனைவி நாகலட்சுமிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தாக கூறப்படுகிறது. இதனால் நாகலட்சுமி சித்தூரில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு சென்று விட்டராம். இதனால், பாபு மனஉளைச்சலில் இருந்துள்ளாா்.

கடந்த 1-ஆம் தேதி அவா் தனது தங்கை மகனுக்கு வாட்ஸ் ஆப்பில் நான் மருந்து குடித்து சாகப் போகிறேன். எனது குடும்பத்தை பாா்த்துக் கொள்ளுங்கள் என கூறிவிட்டு பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளாா். அவரது உறவினா்கள் உடனடியாக பாபுவின் வீட்டுக்கு சென்று அவரை மீட்டு சிகிச்சைக்காக பள்ளிக்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →