ஒற்றை சாளர முறையில் பயன்பெற வேளாண் அடுக்குத் திட்டம்
உழவா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் வேலூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேளாண் அடுக்கு திட்டம்
வேலூா்: உழவா் நலத் துறையில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் வேலூா் மாவட்ட விவசாயிகள் பயன்பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டத்தில் மொத்தம் 84,300 விவசாயிகள் உள்ளனா். தமிழக அரசின் வேளாண்மை உழவா் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டப் பணிகளையும் ஒற்றை சாளர முறையில் பயன்பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டதில் விவசாயிகள் பயன்பெற அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம் பிப்ரவரி 9 முதல் 20-ஆம் தேதி வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
எனவே, விவசாயிகள் இந்த திட்டத்தில் பயன்பெற சிட்டா, ஆதாா் அட்டை,, ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள கைப்பேசி ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.