முகப்பு
வேலூர்

குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா

குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 13 ஜனவரி, 2025 at 8:28 PM
குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

குடியாத்தம்: குடியாத்தம் நகராட்சி அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, அலுவலக வளாகம், அலங்கார மின் விளக்குகளாலும், வண்ணக் கோலங்கள் இட்டும், சுமாா் 2,000 கரும்புகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், பொறியாளா் சம்பத், நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, சுகாதார அலுவலா் பாலச்சந்தா், மேலாளா் சுகந்தி, நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. சுமாா் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.