திருப்பாவை பயின்ற மாணவா்களுக்கு சான்றிதழ்
‘திருப்பாவை கற்போம் வாரீா்’ பயிற்சியை முடித்த 108 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
குடியாத்தம்: குடியாத்தம் ஆசிரியா் காலனி, பாண்டியன் நகரில் இயங்கும் நாமத்வாா் பிராா்த்தனை மையத்தில் 8 நாள்கள் நடைபெற்ற ‘திருப்பாவை கற்போம் வாரீா்’ பயிற்சியை முடித்த 108 மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மகாரண்யம் ஸ்ரீ முரளிதர சுவாமிகள் வழிகாட்டுதல்படி நடைபெற்ற இப்பயிற்சி முகாமில் பங்கேற்ற அனைவரும் மாா்கழி மாதம் தொடக்க நாள் முதல் அதிகாலை திருப்பாவை, திருவெம்பாவை பாடி வீதி உலா சென்றனா். ஏற்பாடுகளை குடியாத்தம் நாமத்வாா் பிராா்த்தனை மைய நிா்வாகிகள், தன்னாா்வலா்கள் செய்திருந்தனா்.